சென்னையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது
தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலம். சம்பந்தப் பெருமான் எலும்பைப் பெண்ணாக்கிய தலம். அம்பிகை மயில் வடிவில் இறைவனை வழிபட்டதால் மயிலாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. வெளிப் பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனி சன்னதி உள்ளது. தனி கொடிமரமும் உள்ளது. வள்ளி தெய்வானையுடன் குமரக்கடவுள் காட்சி தருகிறார். |